திரைப்பட இயக்குநர் பாலு மலர்வண்ணன் |
தமிழ்த் திரையுலகில் திரைப்பட மக்கள் தொடர்பாளராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, இயக்குநராக இருக்கும் ஜி. பாலன், 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கந்தி கிராமத்தில் பிறந்தவர்.
இவருடைய
தந்தை பெயர் கோபாலகிருஷ்ணன் தாயார் பெயர் நாகரத்தினம். இவருக்கு சண்முக சுந்தரம்
என்கிற அண்ணனும், நமசிவாயம் என்கிற தம்பியும்
உள்ளனர். அதே போல வைரக்கண்ணு என்கிற அக்காவும், ராஜலட்சுமி என்கிற தங்கையும் உள்ளனர்.
வடசங்கந்தி கிராம பஞ்சாயத்துப் பள்ளியில் ஐந்தாவது வரை படித்த பாலன், ஆரியலூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில்
எட்டாம் வகுப்பை முடித்தார். எடையூர் அரசினர் உயர் நிலைப் பள்ளியில் பத்தாம்
வகுப்பு பயின்றவர், அதன் பிறகு சினிமா கனவுகள்
மனதில் எழ சினிமா உருவாகும் இடமான சென்னைக்குப் புறப்படலானார்.
. பாலனின் தாயார் நாகரத்தினம்
|
திரை
உலகில் முதலில் நுழைந்துவிட வேண்டும் என்று பல வருடப் போராட்டத்திற்கு பிறகு
திரைப்பட மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களிடமும், அவரது மகன் டைமண்ட் பாபு அவர்களிடமும் உதவியாளராகச்
சேர்ந்தார்.
1991 ஆம்
ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’ படத்தில் வேலை பார்க்கத்
தொடங்கியவர், தொடர்ந்து பிரபுவின் நூறாவது
படமான ‘ராஜகுமாரன்’ படம் வரை உதவி மக்கள் தொடர்பாளராக வேலை பார்த்தார்.
1994 ஆம்
ஆண்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக திரு. கே.ஆர்.ஜி. அவர்கள் பொறுப்பேற்ற போது, அங்கு மக்கள் தொடர்பாளராக வேலை பார்க்கத் தொடங்கினார்.
பல
தயாரிப்பாளர்களை நேரில் சென்று சந்தித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அவர்களை
உறுப்பினராகச் சேர்த்தவர் இவர். தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் ஒரு தொழிலாளியாக இருந்து
உழைத்தவர் இவர். இவரை கவுன்சிலின் பில்லர் என்று உரிமையோடு அழைப்பார் திரு. கே.ஆர்.ஜி.
அவர்கள்.
மதுபாலா, தமிழ்ச்செல்வி, பாலன்,மலர்வண்ணன் |
மாஸ் மூவி மேக்கர்ஸ்
நிறுவனத்தின் சார்பில் திரு எஸ்.எஸ்.துரைராஜ்
அவர்கள் தயாரித்து சரத்குமார் நடித்த ‘தென்காசிப்பட்டணம்’, ‘பாறை’, ‘கம்பீரம்’, ஸ்ரீகாந்த் நடித்த ‘சதுரங்கம்’ போன்ற படங்களுக்கும் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
பங்கஜ் மேத்தாவின் தயாரிப்பில்
சத்யராஜ் நடித்த ‘மாறன்’, சார்மி நடித்த ‘ஆஹா எத்தனை அழகு’, சித்திரைச்
செல்வனின் ‘ஜதி’, ‘ஆக்ரா’, ‘தலைவன்’, ரஞ்சித் நடித்த ‘பதவி படுத்தும்
பாடு’, கே.பாக்யராஜ் கெளரவ வேடத்தில் நடித்த ‘மாணவன் நினைத்தால்’, நந்தா நடித்த ‘கோடம்பாக்கம்’, வாசன் கார்த்திக் நடித்த ‘அய்யன்’, ராஜேஷ்லிங்கம் இயக்கிய ‘புகைப்படம்’, திரவிய பாண்டியன் தயாரித்த ‘ஒச்சாயி’, புதுமுகங்கள் நடித்த ‘தலைஎழுத்து’, ‘தந்திரன்’, ‘தெய்வம் தந்த பூவே’, ‘என் பெயர் குமாரசாமி’, ‘ஓடும் மேகங்களே’, ‘சாமிப்புள்ள’ என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
தினகரன் விருது விழாவில் |
திரைப்பட
பத்திரிகையாளர் சங்கத்தை தொடங்கி இரண்டு ஆண்டுகள் பொதுச் செயலாளராகச் செயலாற்றியவர்.
தற்போதும் துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
2003-ம் ஆண்டு தினகரன்
நாளிதழ் திரைப்பட விருது வழங்கும்
விழாவில் சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான
விருது பெற்றுள்ள இவர், 2007-ம் ஆண்டின்
சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான
எம்.ஜி.ஆர்.-சிவாஜி அகடாமி வழங்கிய விருதும் பெற்றுள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கரங்களால் கண்ணதாசன்
விருது பெற்றுள்ள இவர், திரையுலகம்
நடத்தியுள்ள பல்வேறு நட்சத்திரக்
கலை
விழாக்கள், கிரிக்கெட் போட்டிகள், விருது வழங்கும்
விழாக்களுக்கு ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டிருக்கிறார்.
காவிரி நதி நீர் தொடர்பாக
திரையுலகமே திரண்டு நடத்திய
நெய்வேலியில் நடத்திய போராட்டம், ஒக்கனேக்கல் குடிநீர் திட்டத்திற்கு ஆதரவான போராட்டம், திருட்டு
விசி.டி எதிர்ப்புப்
பேரணி, உண்ணாவிரதம் என திரையுலகம் நடத்திய பல
போராட்டங்களில் கலந்து கொண்டு தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.
திருத்துறைப்பூண்டி கோ.பாலன் என்கிற பெயரில் பல வார இதழ்களில் தின இதழ்களில் 60-க்கும் மேற்பட்ட
சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நினைவெல்லாம்
நீதானே, மனசுக்குள் வரலாமா, வேண்டுமடி
நீ
எனக்கு, குடிமகன், சரசு, சவுந்தர்யா, மனுஷி என இவர் எழுதிய படைப்புகள் புத்தகங்களாக
வெளிவந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர்.-சிவாஜி அகடாமி விருது விழாவில் |
‘ராசாத்தி’ என்கிற டெலிபிலிம் ஒன்றை கதை எழுதி இயக்கிய இவர், பாலு மலர்வண்ணன் என்கிற பெயரில் வெள்ளித்திரையில் ‘ஒத்தவீடு’, ‘பையன்’ என இரு மாறுபட்ட திரைப் படங்களை இயக்கி
இருக்கிறார்.
ராசாத்தி டெலிபிலிம் நாயகி நீபா |
இவருக்குத்
தமிழ்ச்செல்வி என்கிற மனைவியும், மலர்வண்ணன் என்கிற மகனும், மதுபாலா என்கிற மகளும் உள்ளனர்.
குக்கிராமத்தில்
ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஒரு படைப்பாளியாக தன்னை
அடையாளம் காட்ட இவரது நம்பிக்கையும் முயற்சியும் பெரும் பலமாக இருந்திருக்கிறது.
ஏழ்மையாக
இருந்தாலும் தான் நினைத்ததை அடைய பல போராட்டங்களைக் கடந்து அதில் வெற்றியும்
பெற்றிருக்கிறார்.
‘பையன்’ – பைசல், ராகவி |
No comments:
Post a Comment